Type to search

பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

INDIA India Head Line

பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ Men commit suicide females }

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய சுகாதார கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ம் ஆண்டில் 1,08,593 ஆக இருந்த தற்கொலை எண்ணிக்கை, 2015 ம் ஆண்டில் 1,33,623 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், அதற்கு அடுத்து பிரிவில் இருப்பது 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் தற்கொலை விகிதம் ஒரு சதவீதமாகவும், 14 முதல் 18 வயது வரையிலானவர்களின் தற்கொலை விகிதம் 6 சதவீதமாகவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

45 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 19 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 7.77 சதவீதமாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் எனவும் அந்த அறிக்கையின் புள்ளி விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிப்பவர்களின் சராசரி வாழ்நாள் 68.35 வருடங்களாக உள்ள நிலையில், சமூக கலாச்சார பிரச்னைகள், பாகுபாடுகள், அதிக சம்பளத்துடனான வேலையில் ஏற்படும் போட்டிகள் ஆகியன பெரும்பாலான இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Men commit suicide females

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like