Type to search

“வாழ விடுங்கள்” இல்லை “சாக விடுங்கள்” – விவசாயிகள் கதறல்!

INDIA India Head Line

“வாழ விடுங்கள்” இல்லை “சாக விடுங்கள்” – விவசாயிகள் கதறல்!

Share

{ farmers polise strike }

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்தும் அளவீட்டு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது.

அத்தோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை, வேதிமலை என பல மலைகள் இரண்டாக உடைக்கப்பட இருக்கின்றது. இதன் காரணமாக இந்த மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட இருக்கின்றது.

ஆனாலும், இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயமே அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், விளை நிலங்களை அரசு பிடிங்கிக்கொண்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்டம் குப்பனூர் ஊராட்சி சீரிக்காடு பகுதியில் தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் சில அதிகாரிகள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். ஆனால், தங்கள் தோட்டத்திற்குள் அதிகாரிகளை செல்ல விடாமல் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலங்களை நம்பித்தான் நாங்கள் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம் எங்களின் தோட்டம், கிணறு, வீடு என அனைத்தும் இடிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் கண்ணீர் வடித்தனர். அத்தோடு, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாற்றுப்பாதையை அரசு தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், கவலைப்படாதீர்கள்.. உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் எனக்கூறிவிட்டு, நில அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.

Tags: farmers polise strike

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Tags: