Categories: INDIA

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

{ edapadi letter narendra modi }

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பதை மேலும் தாமதப்படுத்தி தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்க கர்நாடக அரசு முயல்வதாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை நாடியுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம், கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி மற்றும் கடந்த மே 18ம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளால் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முடிந்த பிரச்னையை கர்நாடக அரசு மீண்டும் கிளப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டை தாமதப்படுத்த கர்நாடக அரசு முயல்வது உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிக்க அம்மாநில அரசு மேற்கொள்ளும் மற்றொரு செயல் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் முழுமையாக செயல்படுவதை மேலும் தாமதப்படுத்துவது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என முதல்வர் கூறியுள்ளார்.

எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டி அதன் மூலம் தமிழகத்திற்கு மாதத்திற்கு 10 நாள் என்கிற அடிப்படையில் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: edapadi letter narendra modi

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

14 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

17 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

17 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

18 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

18 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

19 hours ago