Categories: INDIA

இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

{ dead shocked family taking home }

தாங்கள் மருத்துவமனையில் அனுமதித்தவர் உயிரோடு இருக்க அவர் இறந்து விட்டதாக வேறொருவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையினர் ஒப்படைத்த உடலை வீட்டுக்கு எடுத்து வந்து பார்த்தபோது அதிர்ந்தனர், அது வேறொருவரின் உடல்!!

அவினாஷ் தாதாசாகேப் பக்வாதே என்பவர் உடல்நலக்கோளாறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 50 வயதான இவருடைய குடும்பத்தினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகிகள் பக்வாதே இறந்து விட்டார் என்று உடலை ஒப்படடைத்தனர்.

அதுவும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல் என்பதால் முகம் மூடப்பட்டிருந்தது குடும்பத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை, வீட்டுக்கு உடலை எடுத்து சென்று பார்த்தபோது தங்கள் உறவினர் அல்ல வேறொருவரின் உடலை ஒப்படைத்தனர் என்பதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

யார் இறந்ததாக உடல் ஒப்படைக்கப்பட்டதோ அந்த அவினாஷ் பக்வாதே மருத்துவமனையில் உயிருடன் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

எப்படி இந்தக் குழப்பம்? என்றே தெரியாத குழப்பத்துடன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

அதைவிட அவலமானது, யாருடைய உடலை ஒப்படைத்தோம் என்ற அடையாளமும் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியரக்ளுக்குத் தெரியவில்லை.

சங்லி சிவில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது, இங்குதான் பக்வாதே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லிவர் பிரச்சினையினால் பக்வாதே அவதிப்பட்டு வருகிறார், சிகிச்சை நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த செவ்வாயன்று பக்வாதே குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பில் பக்வாதே இறந்து விட்டார் வந்து உடலைப் பெற்றுக்கொள்ளவும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து அலறியடித்துக் கொண்டு வந்த உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

“இதில் உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது, இது பக்வாதேயின் உடல் இல்லை என்ற ஐயம் எழுந்தது. மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது உடனே உடலை எடுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்”என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சங்லியிலிருந்து 25 கிமீ தூரத்தில் தஸ்கவானில் உள்ள வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அவர் உடல் இல்லை இது என்ற சந்தேகம் எழ உடலில் சுற்றப்பட்ட துணியை அகற்றியுள்ளனர்,

அப்போது வேறொருவரின் உடலைக் கொடுத்தது கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர் குழப்பமும் அடைந்தனர், காரணம் பக்வாதே இறந்தது உண்மை ஆனால் உடல் மாறிவிட்டது என்றும், ஒருவேளை பக்வாதே உயிருடன் இருக்கின்றார், வேறொருவர் உடலை கொடுத்துள்ளனர் என்ற நம்பிக்கைக் கீற்று மற்றொரு புறமுமாக குடும்பத்தினர் குழம்பியுள்ளனர்.

மருத்துவனைக்கு விரைந்து வந்து பார்த்தால் அவினாஷ் பக்வாதே உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தவர் உடல் யாருடையது, அவர் உடலை ஏன் இன்னும் யாரும் பெற்றுக்கொள்ளவில்லை, புரியாத புதிர்….

Tags: dead shocked family taking home

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Kowshalya V

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

7 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

8 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

9 hours ago