Type to search

`பசுமைச் சாலையைப் பற்றி பேசினாலே கைது’ – கொந்தளிக்கும் விவசாய சங்கம்!

India Head Line Tamil nadu

`பசுமைச் சாலையைப் பற்றி பேசினாலே கைது’ – கொந்தளிக்கும் விவசாய சங்கம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

“சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை மத்திய அரசிடமிருந்து போராடிப் பெற்றோம். இதனால், இந்தத் திட்டத்தைக் கைவிட முடியாது” என திட்டவட்டமாகக் கூறிவிட்டார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் திட்டத்தை விரைவாக முடிப்பதற்கு 5 மாவட்டங்களிலும் ஆங்காங்கே விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால், 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்கு 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கைது நடவடிக்கையைத் தீவரமாக்கிவருகின்றனர் போலீஸார். மன்சூர் அலிகான், பியுஷ் மானஷ், வளர்மதி எனப் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்கள் பாரபட்சமின்றிக் கைதுசெய்யப்படுகிறார்கள்.arrested talk green road’ – frightened farm association

திருவண்ணாமலையில் இன்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் தலைமையில், பசுமை வழிச் சாலைகுறித்து 5 மாவட்ட விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் மணிலா ஆலையில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில், அகில இந்திய துணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே டி.கே.வெங்கடேசனையும் மாவட்ட துணைச் செயலாளர் பலராமனையும் அதிரடி நடவடிக்கையாக போலீஸார் கைதுசெய்தனர். அவர்களோடு 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளையும் கைதுசெய்தனர்.

இதுகுறித்துப் பேசிய மாநில பொதுச் செயலாளர் சண்முகம், “பசுமை வழிச் சாலைகுறித்து திருவண்ணாமலை முழுவதும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் திருமண மண்டபத்தில் நடத்த அனுமதிக்கக் கூடாது என போலீஸ் மண்டப ஓநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால், நிகழ்ச்சி நடத்த மண்டபத்தில் அனுமதி கிடைக்கவில்லை. தனியாருக்குச் சொந்தமான மணிலா உடைக்கும் ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் 5 மாவட்ட விவசாயிகள் ஒன்றுகூடுவதற்கு முன்பே, ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடுசெய்த வெங்கடேசன், பலராமன் மற்றும் அங்கிருந்த ந்க்கும் மேற்பட்ட விவசாயிகளையும் எந்த அறிவிப்பும் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், ஆலோசனைக் கூட்டம் நடத்த அனுமதி வாங்கவில்லை என்று கூறியும் கைது செய்தது போலீஸ். ஆனால், நாங்கள் அனுமதி கேட்டதும் முதலில் தந்தார்கள்.

பிறகு மறுத்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி, தனியார் இடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த போலீஸில் அனுமதி வாங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பசுமை வழிச் சாலையைப் பற்றி யாரவது சும்மா பேசினாலே அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கில் போலீஸ் அடாவடி செய்கிறது என்றார். அதோடு, பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வரும் 26-ம் தேதி ஐந்து மாவட்டத்திலேயும் போராட்டம் நடைபெறும்” என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: