Type to search

நியாயத்தை கேட்டால் தவறா? – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை!

Tamil nadu

நியாயத்தை கேட்டால் தவறா? – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் சோகத்தில் இருந்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து சிறை சென்று 11 நாள்கள் கழித்து வீட்டுற்கு வந்த குப்பனூர் முத்துக்குமாரை விவசாயிகள் மாலை போட்டு வரவேற்பு கொடுத்தார்கள்.wrong ask justice? – returning prison painful

இதுபற்றி முத்துக்குமாரிடம் பேசியபோது, ‘சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு 14-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என சேலம் கலெக்டர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், 6-ம் தேதி நில அளவீடு செய்ய வந்தார்கள். அந்த அதிகாரிகளிடம் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் நிலத்தில் அளவீடு செய்வது நியாயமா? அறிவிப்புக்குப் பிறகு அளவீடு செய்யுங்கள் என்று தெரிவித்தோம்.

அதையடுத்து 9-ம் தேதி விடியற்காலை காவல்துறையினர் வீட்டுக்குள் புகுந்து குண்டுக் கட்டாக தூக்கிட்டுப் போய், வண்டியில் ஏற்றி பஸ் கண்ணாடி உடைத்தது, அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது என பல வழக்குகள் போட்டு ஆத்தூர் சப் ஜெயிலில் அடைத்து விட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். எதற்காக 11 நாள்கள் சிறையில் அடைத்தார்கள், அரசு அதிகாரிகளிடம் நியாயத்தைப் பேசுவது கூட தவறா?

மேலும் எனக்கு அப்பா, அம்மா கிடையாது. நான் என் மனைவி, மகளோடு வசித்து வருகிறேன். எங்களுக்கு யாரும் ஆதரவும் இல்லை. இந்த சூழ்நிலையில், என்னைக் கைது செஞ்சுட்டு போயிட்டார்கள். என் மனைவி அவமானம் தாங்காமல் மருந்து குடித்துவிட்டதாகச் சொன்னார்கள். என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்லும். இப்படிப்பட்ட மோசமான அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை. இன்னும் என் மனைவி, குழந்தையைக்கூட போய்ப் பார்க்கவில்லை” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: