Type to search

‘கொன்னுட்டு நிலத்தை எடுத்திட்டுப்போங்க!’ – கொந்தளிக்கும் விவசாயி!

India Head Line Tamil nadu

‘கொன்னுட்டு நிலத்தை எடுத்திட்டுப்போங்க!’ – கொந்தளிக்கும் விவசாயி!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நேற்று சேலம் மாவட்டத்தில் தொடங்கியது. மஞ்சவாடி கனவாய், அடிமலைப்புதூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் போன்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

அடிமலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 11 பேர் தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு `8 வழி சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது’ என்று நில அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்தையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் குவிப்பையடுத்து விவசாயிகள் யாரிடமும் பேசுவதற்கே அச்சப்பட்டதையடுத்து 8 வழிச் சாலைக்கான எல்லைக் கல் விரைந்து போடப்பட்டது.

இதுபற்றி ஆச்சாங்குட்டப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார், “அடுத்த மாதம் 10-ம் தேதி அயோத்தியாப்பட்டணத்தில் உள்ளஅன்னை கஸ்தூரிபாய் மண்டபத்தில் ஆட்சேபனை கூட்டம் நடத்தப்போவதாக தாசில்தார் தெரிவித்தார். இதற்கிடையில் திடுதிப்பென்று எங்க விளை நிலத்துக்குள் புகுந்து கல் நடுகிறார்கள். மீறிக் கேட்டால் மிரட்டுறாங்க, அடிக்கிறாங்க. கைது செஞ்சுட்டுப் போறாங்க. இது என்ன ஜனநாயக நாடா? இழப்பீடு தொகை கொடுத்த பிறகு நிலம் அரசுக்குச் சொந்தம். அதுவரை எங்களுக்குச் சொந்தம். ஆனால், எங்களிடம் கேட்காமலேயே கல்லைப் போடுவது எந்த விதத்தில் நியாயம்? இதைக் கேட்டால் கைது செய்கிறார்கள். அப்பா, அம்மா, ஆடு, மாடுகளோடு எங்களைக் காலி செய்கிறார்கள். அந்தப் பாவம் ஆட்சியாளர்களை சும்மா விடாது” என்றார்.

இதுபற்றி ஆச்சாங்குட்டப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமக்கா, “எல்லா நிலமும் போயிடுச்சு. வாய் திறந்து அழுவதற்குகூட இந்த நாட்டில் உரிமை இல்லை. ரோட்டில் செயினை அறுத்துட்டுப் போகின்ற கொள்ளைக்காரர்களைபோல அரசாங்கம் எங்கள் வீடு, காடுகளை கொள்ளை அடிச்சுட்டுப் போறாங்க. போலீஸ்காரர்களைக் காட்டி எங்களை அச்சப்பட வைக்கிறார்கள். இந்த மாடு, கன்றுக்குட்டியை எல்லாம் பிடிச்சுட்டு எங்க போக முடியும். கோடைக்காலத்தில் விலைக்கு தண்ணீர் ஊற்றி இந்த தென்னை மரங்களை வளர்த்தோம். இப்ப அடியோட வெட்டப் போகிறோம் என்றால் யாருக்கு கோபம் வராது. எங்களுக்கு மருந்து வாங்கி கொன்றுவிட்டு இந்த நிலத்தை எடுத்துட்டு போகலாம்”என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: