Type to search

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்: பிரதமர் மோடி!

INDIA India Top Story

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்: பிரதமர் மோடி!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ Farmers revenue doubled }

விவசாயிகளின் வருவாயை வரும் 2022 ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக உயர்த்த அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக உரையாடல் நடத்தி வருகின்றார். அப்போது அவர், தாம் விவசாயிகளின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்து வருவாதகவும் 2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்த போவதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின், நாட்டின் உணவு பொருகள் மற்றும் அதன் பாதுகாப்பு தன்மைகள் குறித்த பெருமை விவசாயிகளையே சேரும் என்றும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

மேலும் விவசாய தானியங்களை முறையாக பாதுகாக்கவும், விவசாயம் சார்ந்த கூடுதல் வருமானத்தை விவசாயிகள் விரைவில் ஈட்டவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், விவசாயத்துறைக்கான வரவுசெலவுத் திட்டம், தனது முதல் நான்கு ஆண்டுகளில் ரூ. 2.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இரட்டிப்பாகியுள்ளது என்றார்.

மேலும் நாட்டின் உணவுப் பற்றாக்குறையை குறைக்க உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் பால், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியும் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

2017-18ம் ஆண்டுகளில் 280 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சராசரியாக 250 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் இதில் பருப்பு உற்பத்தி 10.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வாங்குவதற்கு கடனுதவி அளிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் குறைந்த விலைக்கு மூலப்பொருள்களை பெறவும், உற்பத்தி பொருள்களை எளிதில் சந்தைப்படுத்தவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

Tags: Farmers revenue doubled

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: