Type to search

உனக்கு வேற மாப்பிள்ளையா..? என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்!

INDIA CRIME Tamil nadu

உனக்கு வேற மாப்பிள்ளையா..? என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்!

Share
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    77
    Shares

{ new boyfriend murder }

காதலி தனக்கு கிடைக்காத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்திகொண்டு அனைவருக்கும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த இளைஞர் சுரேஷ்குமார். இவர் ஒரு பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இது ஒரு ஃபேஸ்புக் காதலாம். தாம் விரும்பிய அந்த பெண்ணை திருமணமும் செய்ய இளைஞர் ஆசைப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவரது வீட்டில் பார்த்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட சுரேஷ்குமார், இன்று காலை நேராக காதலியின் கண் முன்னே வந்து நின்றார். திடீரென தன்னிடமிருந்த கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

கத்திக் குத்தினால் சுரேஷ்குமாரின் உடலிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது. இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்த சுரேஷ்குமாரை அங்கிருந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

காதலி கண்முன்னே கத்தியால் இளைஞர் குத்தி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: new boyfriend murder

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

*இந்து மதப் பெண்ணின் உடலை வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் செய்த காரியம்!

*“திருமணத்தில் முக்காடு போட்டு ஏமாற்றி விட்டார்கள்…. மனைவிக்கு தாடியிருக்கு!

*சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது!

*எலியை கைது செய்யமுடியாமல் தடுமாறும் காவல்துறையினர்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    77
    Shares
Tags:

You Might also Like