Type to search

பிரதமர் மோடி திருமணம் ஆனவரா? ஆகாதவரா? – கவர்னர் ஆனந்திபென் பட்டேல்!

INDIA India Top Story

பிரதமர் மோடி திருமணம் ஆனவரா? ஆகாதவரா? – கவர்னர் ஆனந்திபென் பட்டேல்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்து பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்திபென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின் அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்திபென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.modi married? (or) not? – governor anandiben patel!

இதனைத்தொடர்ந்து, அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்திபென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார். அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர். குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி ஜசோதாபென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதாபென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், ஆனந்திபென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: