Type to search

இன்று மீன்கள் மிதக்கின்றன – நாளை நாங்கள்! சேலம் மக்கள்!

India Head Line Tamil nadu

இன்று மீன்கள் மிதக்கின்றன – நாளை நாங்கள்! சேலம் மக்கள்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

(fish selam people)

சேலத்தில் சாயப்பட்டறைக்  கழிவுகளால்  மீன்கள்  செத்து  மிதந்து  துர்நாற்றம்  வீசிய கொட்டநத்தான் ஏரியின் மதகுகளை பொதுமக்களே உடைத்து  தண்ணீரை வெளியேற்றினர்.

சாயப்பட்டறைகள்  மீது  நடவடிக்கை  எடுக்கக்  கோரி  பொதுமக்கள்  ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில்   இன்று நடமாடும் மருத்துவ வாகனம்  மூலம் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மனோன்மணியம் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஏரியை ஆய்வு செய்துள்ளார்.

இதை அறிந்த மக்கள் எம்.எல்.ஏ.வையும், வட்டாட்சியரையும்  முற்றுகையிட்டு, ஏரியின் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர்.

ஆனால்,  ஒரு மதகை மட்டும் திறந்து விடுவதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த மக்கள், தாமாகவே மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றத் தொடங்கினர்.

tags;-fish selam people

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: