Type to search

சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்த நான்கு சிறுவர்கள்!

Tamil nadu

சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்த நான்கு சிறுவர்கள்!

Share
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

{ Four boys buried dead }
கஞ்சா புகைப்பதை போலீசில் கூறிவிடுவேன் என மிரட்டி பணம் கேட்டதால் சிறுவனை கொன்று புதைத்ததாக நுங்கம்பாக்கம் போலீசாரிடம் சரணடைந்த 3 சிறுவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜேஷ் 8-ஆம் வகுப்பு படித்துவந்தான். கடந்த ஜனவரி 14-ஆம் திகதி வெளியே சென்ற ராஜேஷ் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை பெருமாள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததாக கூறும் ராஜேஷின் பெற்றோரும், உறவினர்களும் தாங்களும் பல இடங்களில் ராஜேஷை தேடியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜேஷை கொலை செய்ததாக கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சரணடைந்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் கஞ்சா புகைத்தபோது, அங்கு ராஜேஷ் வந்திருக்கின்றார். அப்போது, கஞ்சா புகைப்பதை போலீசில் கூறிவிடுவேன் என மிரட்டி 4 பேரிடமும் ராஜேஷ் பணம் கேட்டதாக அந்த சிறுவர்கள் தெரிவித்தனர்.

இதனால் 4 பேரும் ஆத்திரத்தில் ராஜேஷை தாக்கியபோது அவர் உயிரிழந்த நிலையில், உடலை சுடுகாட்டிலேயே புதைத்ததாக 3 சிறுவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags: Four boys buried dead

< மேலதிக இந்திய செய்திகள் >>

*கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

*“என்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்” : பிறப்புறுப்பை அறுத்தெறிந்து தன்னை நிரூபித்த துறவி!

*பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

*டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

*கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>


  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares
Tags: