கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
Share

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் மூடி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.can sulfuric acid remove, started again? – sterlite plant!
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனடியாக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கந்தக அமிலம் கசிவு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே அந்த கந்தக அமிலத்தை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் அது எவ்வாறு அகற்றப்படும், எத்தனை மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து தெளிவான கருத்தை வெளியிடவில்லை. அடர் கந்தக அமிலமாக இருப்பதினால், அதனை அடர்த்தி குறைவானதாக மாற்றி தான் அதனை செயலிழக்க வைக்க முடியும். இதற்காக வெளியிடங்களில் இருந்து ஏதாவது கெமிக்கல் ரியாக்ஷனை உருவாக்கி அடர்த்தியை குறைப்பார்களா? என்பது குறித்தும் அவர்கள் முழுமையாக தெரிவிக்கவில்லை.
மேலும் இப்போது ஸ்டெர்லைட் ஆலையை சீல்லிட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைகளில் இருக்கும் டேங்கர் லாரிகளையோ, அங்குள்ள சில இரசாயண கலவைகளை பயன்படுத்தியே, அதன் வீரியத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டேங்கரில் லேசான கழிவு ஏற்பட்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தாலும், அங்குள்ள சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பீதியை தான் கிளப்பி வருகிறது. இந்த கந்தக அமிலத்தை அகற்றுவதற்கு முதலில் ஒரு நிபுணர் குழு வேண்டும். அந்த நிபுணர் குழுவில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வாறு அகற்றுவார்கள் என்பது குறித்து இன்று மதியம் தான் ஆட்சியர் வெளிப்படுத்துவார், என தெரிகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மூலப்பொருள் தாமிரத்தை உற்பத்தி செய்துதான். அதனின் உபபொருட்கள் தான் பாஸ்பெரிக் மற்றும் கந்தக அமிலம். அதில் கந்தக அமிலம் கசிவு .தற்போது ஏற்பட்டுள்ளது தான் மக்களின் பீதியை அதிகரித்திருக்கிறது. அதிலும் இங்கிருக்கக்கூடிய எத்தனை டேங்கரில் கந்தக அமிலம் வெளியேறி வருகிறது என்பது குறித்து முழுமையான தகவல்களை யாரும் வெளியிடவில்லை. மேலும் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் மூடிதான் மறைக்கப்படுகிறது. அதனால் எத்தனை நாளைக்கு, எவ்வாறு அகற்றப்படும் என்பது பற்றிய முழுமையான தகவல்களை அதிகாரிகள் தர மறுத்துள்ளனர்.
More Tamil News
- பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
- கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
- 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!
- வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் கடும் நடவடிக்கை – ஜெயக்குமார்!
- மது வாங்கிக்கொடுக்குமாறு தாயிடம் அடம்பிடித்த குழந்தை!
- அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?