Type to search

இதய கோளாறால் பாதிக்கப்பட்டு நீலநிறமாக மாறிய கைக்குழந்தை!!

India Head Line Tamil nadu

இதய கோளாறால் பாதிக்கப்பட்டு நீலநிறமாக மாறிய கைக்குழந்தை!!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

(born blue color baby shocking parents)

இதய கோளாறால் பாதிக்கப்பட்டு நீலநிறமாக மாறிய கனிஸ்ரீ என்ற பெண் குழந்தைக்கு சிகிச்சை  செய்ய  கொஞ்சம்  உதவுங்கள்.

காரணம் கனிஸ்ரீ பிறக்கும் போதே இதயக் கோளாறுடன் அவள் உடல் நிலை மிகவும் மோசமாக  இருந்ததுதான். டாக்டர்கள் இதை கூறியவுடன் , இந்த நிலையை கேட்டதும் அவர்களின் பெற்றோரால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மனம் நொறுங்கிப் போன நிலையில் அப்படியே வாழ்க்கையை வெறுத்து இடிந்து போய்விட்டார்கள்.

Little Kanisri’s Weak Heart Defect Makes Her Turn Blue From Pain

மேலும் , கனிஸ்ரீ 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிறந்தாள். பிறந்து 22 நாட்களே ஆன சமயத்தில் அவளுக்கு போலியோ தடுப்பு ஊசி போட்டனர்.  அப்பொழுது அவளின் இருதய துடிப்பை கண்காணித்த மருத்துவர் இதயத் துடிப்பு சீராக இல்லை.

உடனே ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்து விடலாம் என்றார். இந்த சமயத்தில் தான் அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் ஒரு மருத்துவ முகாமை ஏற்படுத்தி இருந்தது. கனிஸ்ரீ அப்பா அவளை ஒரு மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து, சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதற்கான செலவு மிகவும் அதிகம். அப்பொழுது தான் கனிஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். உங்கள் மகள் 22 நாட்களாக உயிருடன் இருப்பதே பெரிய விஷயம். அவள் பிறந்ததிலிருந்து  இன்று  வரை  தன் வாழ்நாளுடன் போராடிக் கொண்டு இருக்கிறாள். இதயத்தில் பெரிய பாதிப்பு உள்ளது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

tags;-born blue color baby shocking parents

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares