Type to search

வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் கடும் நடவடிக்கை – ஜெயக்குமார்!

Tamil nadu

வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் கடும் நடவடிக்கை – ஜெயக்குமார்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வன்முறையை தூண்டும்விதமாக யார் பேசினாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.whoever speaks violence strict action – Jayakumar

சென்னை பெசன்ட் நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற படகு போட்டியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கடலில் மீன் இனப்பெருக்கமும் குறைவதாக கூறினார்.

பிளாஸ்டிக் ஆலைகள் மூடப்படுவதால், வேலையிழக்கும் தொழிலாளர்கள், மாற்றுத்தொழில்களை மேற்கொள்ள அரசு உதவி செய்யும் என குறிப்பிட்ட அவர், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாலேயே நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விளக்கம் அளித்தார்.

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: