Type to search

அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் – ஓ.பன்னீர் செல்வம்!

India Head Line Tamil nadu

அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் – ஓ.பன்னீர் செல்வம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தேனி மாவட்ட பாசனத்துக்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்துவிட்டார்.opening water dam – o. paneer riches

தென்மேற்கு பருவமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையில், இன்று காலை நிலவரப்படி 127.40 அடி தண்ணீர் உள்ளது. மேலும் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையை திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதை ஏற்று இன்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தேக்கடி ஷட்டர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பங்கேற்று, தண்ணீரை திறந்து வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக இன்று வினாடிக்கு 300 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், தேனி மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: