Type to search

15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

INDIA

15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Share

இந்தியாவில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ள இரண்டாவது மாநிலம் மிசோரம் ஆகும். இயற்கை சூழலுடன் பசுமையான நிலப்பகுதிகளை கொண்ட மிசோரமில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 52 பேர் மட்டுமே வாழ்வதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி வெளிமாநிலத்தவர்கள் அங்கு ஆயிரக்கணக்கில் குடிபெயர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளன.birth children 15, gift mizoram

இதனால் சொந்த மாநில மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அங்குள்ள அமைப்புகள் மிசோரம் மக்களை அதிகளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. ஒரு தம்பதியினர் குறைந்தது 15 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் தான் சொந்த மாநிலத்தவரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு செய்வதன் மூலமாக தொழில் வளம் உயரும் எனவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் எங்கள் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும், இதற்காகத்தான் எங்கள் பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கிறோம் என்றும் மிசோரமை சேர்ந்த அமைப்புகள் விளக்கமளித்துள்ளன.

More Tamil News

Tamil News Group websites :

Tags: