Type to search

நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்!

Tamil nadu

நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தது போலீஸ்!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதித்ததில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.actor mansoor ali khan arrested police

தமிழகத்தில் ஸ்டெர்லைட், மீத்தேன், காவிரி விவகாரங்களுக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்தின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் இச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. விவசாய நிலங்கள், மலைகள் இதற்காக கையகப்படுத்துவுள்ளதாகவும், அவ்வாறு கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்து.

இதுகுறித்து, பேசிய முதல்வர் பழனிசாமி “சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே அமைக்கப்படுகிறது. யாருக்கும் தனியாக சாலை அமைக்கப்படவில்லை. 41 ஹெக்டர் வனப்பகுதி மட்டுமே சாலை திட்டத்துக்காக எடுக்கப்படுகிறது. பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி” எனத் தெரிவித்தார். இதற்கிடையே, சேலம் எட்டு வழிச்சாலைக்கு நடிகர் மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் சேலம் சென்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை சந்தித்துப் பேசினார் நடிகர் மன்சூர் அலிகான். பின்னர் செய்தியாளர்களைச் மன்சூர் அலிகான், “இங்கு இருக்கும் மக்கள் யாரும் 8 வழி பசுமை சாலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. 4 வழிச் சாலைக்கு சுங்கச் சாவடி அமைத்துக் கொள்ளையடிப்பதை 8 வழிச் சாலை அமைத்து பெரிய அளவில் கொள்ளை அடிப்பார்கள். சேலத்தில் 8 வழிச் சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன். 8 வழி சாலை அமைத்தால் சேலத்தில் வாழ முடியாது” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் கருத்தை அடுத்து வன்முறைக்கு எதிராகப் பேசியதாக மன்சூர் அலிகானை போலீஸார் கைது செய்துள்ளனர். சேலம் தீவட்டிப்பெட்டி போலீஸார் இன்று காலை அவரைக் கைது செய்து சேலம் அழைத்துச் சென்றுள்ளனர். இவ்விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: