Type to search

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

Tamil nadu

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ Edappadi Palanisamy visit Delhi today }

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கின்றார்.

அடுத்த ஐந்தாண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகின்றது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல், தேசிய ஊட்டச்சத்து திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கின்றார்.

கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அளிக்கவுள்ளார்.

Tags: Edappadi Palanisamy visit Delhi today

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

*விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ

*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!

*4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி!

*பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like