Type to search

​இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

INDIA

​இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ Water famine India future people }

இந்தியாவில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து நிதி ஆயோக் அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியா மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்காக அதிகரித்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதுள்ள தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்தால், நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சத்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதம் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீரே இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மையான குடிநீர் கிடைக்காமல் இந்தியாவில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, இந்தியாவில் உள்ள 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமான நிலையை அடைந்து வருவதாக நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளின் பட்டியலில்இந்தியாமிகவும்பின்தங்கி120இடத்தில்உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Water famine India future people

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ

*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!

*4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி!

*பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com

 


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like