Type to search

ராஜீவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்: சுப்பிரமணியன் சுவாமி

INDIA India Head Line

ராஜீவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்: சுப்பிரமணியன் சுவாமி

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

Rajiv Gandhis murder case important chief criminal Italy

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கியமான தலைமை குற்றவாளி இத்தாலியில் வசித்து வருகிறார் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதையும் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்க பதிவில் குடியரசுத் தலைவரின் முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கிலிடப்படாமல், தப்பித்துள்ள கொலையாளிகள் உண்மையிலேயே அதிருஷ்டசாலிகள். முக்கியமான தலைமை குற்றவாளி இத்தாலியில் வசித்து வருகிறார். ஆனால், அவர் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

Rajiv Gandhis murder case important chief criminal Italy

Tags: Congress finance financial crisis

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

*விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ

*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!

*4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி!

*பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com

 


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: