Type to search

பசுமைவழிச்சாலை திட்டத்தை நிறுத்தாவிட்டால் முதல்வர் வீடு முன் தற்கொலை செய்வோம்!

India Head Line Tamil nadu

பசுமைவழிச்சாலை திட்டத்தை நிறுத்தாவிட்டால் முதல்வர் வீடு முன் தற்கொலை செய்வோம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ green house plan stop let chief minister }

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு வலுக்கிறது. விவசாய நிலங்களை அழிக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் என சேலம் பூலாவரி கிராம மக்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. தமிழகமே உற்று நோக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினாலும் தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எங்களின் பசுமை நிறைந்த சோளையில் உள்ள மரங்களை அழித்துவிட்டு பசுமைவழிச்சாலையை கொண்டு வருகின்றார்கள். இந்த 8 வழிச்சாலை திட்டத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பயனுமில்லை, இவ்வாறான திட்டத்தை கொண்டுவர தமிழக அரசு ஏன் துடிக்கின்றது என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும், காலம் காலமாக வாழ்வாதாரமாக இருந்துவரும் விவசாய நிலத்தை அரசானது சொற்ப அளவு இழப்பீட்டை கொடுத்து கைப்பற்ற பார்க்கின்றது. எனவே ஒருபோதும் நிலத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

அதனை மீறி நிலத்தை கைப்பற்றினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு விஷமருந்தி தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

tags: green house plan stop let chief minister

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

*விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ

*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!

*4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்திற்கு சென்ற மோடி!

*பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: