சென்னையில் பிரபல நடிகரை கத்தி முனையில் மிரட்டி கடத்திய கும்பல்!
Share

சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் வசித்து வருகிறார் பிரபல கன்னட திரைப்பட நடிகர் ஜி.ஆர் என்கிற ராமச்சந்திரன். இவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.Gangster gangster chennai threw prominent actor knife
இந்நிலையில் ராமச்சந்திரன் தனது வீட்டில் இருந்து நேற்று இரவு காரில் வெளியே சென்றபோது, வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் முகவரி கேட்பது போல் காரை மறித்துள்ளனர். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த அந்த கும்பல் சிறிது நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளது. இதில் பயந்த நடிகர் ஜி.ஆர் காரில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடினார். இதையடுத்து அந்த கும்பல் நிதானமாக காரை கடத்திச்சென்றனர்.
இதையடுத்து நடிகர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது ஓட்டுநர் சந்திரன் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
More Tamil News
- தலித் சிறுவர்களுக்கு அடி! உதை! – மகாராஷ்டிராவில் சாதிய கொடூரம்!
- தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு!
- நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு தான் தோல்வி : டிடிவி தினகரன்!
- பத்திரிகையாளர் கொலை..! குற்றவாளிகளின் படத்தை வெளியிட்ட காவல்துறை!
- ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!
- தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!