Type to search

பஸ்ஸில் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது!

Tamil nadu

பஸ்ஸில் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

சிவகங்கையில் இருந்து மானாமதுரை வந்த பேருந்தில், பெண் போலீஸ் ஒருவரிடம், நடத்துநர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இதனால், நடத்துநருக்கும் – பெண் போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.driver conductor arrested telling ticket bus

இதனையடுத்து பின்னர், பெண் போலீஸ் டிக்கெட் எடுத்துவிட்டு பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில், மானாமதுரை சிப்காட் தொழிற்சாலையில் உள்ள பணிமனையில் பேருந்தை நிறுத்திவிட்டு நடத்துநரும் – ஓட்டுநரும் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது, அவங்கு வந்த காவலர்கள் இருவரையும் தாக்கி, அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதனால், பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

driver conductor arrested telling ticket bus

இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள், காவல்நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் போலீஸார் விடுவித்தனர். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன.

More Tamil News

Tamil News Group websites :


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: