Type to search

தலித் சிறுவர்களுக்கு அடி! உதை! – மகாராஷ்டிராவில் சாதிய கொடூரம்!

INDIA

தலித் சிறுவர்களுக்கு அடி! உதை! – மகாராஷ்டிராவில் சாதிய கொடூரம்!

Share
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுக்குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள் மீது உயர் சாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.dalit children beat kicking! – caste horror maharashtra

ஜல்காவுன் மாவட்டம் வகாடி என்ற கிராமத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுக்குளத்தில் குளித்த 2 சகோதரர்களை பிடித்து செல்லும் உயர் சாதியினர் அந்த சிறுவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை நிற்கவைத்து கம்பு மற்றும் பெல்ட்டால் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். சிறுவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியவர்கள் அதை வீடியோ பதிவு செய்து சமூபவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோவை குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏவும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதேபோல் குஜராத் மாநிலத்தில் 13 வயது தலித் சிறுவனையும் 4 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

photo source : தினகரன்

More Tamil News

Tamil News Group websites :


  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares
Tags: