Type to search

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு!

Tamil nadu

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதரதுறை இயக்குனர் சஞ்சய் ராய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி, தமிழகத்தில் எந்த பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறித்து தெரிவிக்க, இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் தேவைபடுகிறது, என குறிப்பிட்டுள்ளார்.central government petition sought 3months report AIIMS tamilnadu

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் மருத்துவமனை அமைப்பதற்கான வசதிகள் குறித்து, ஆய்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: