Type to search

மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!

Tamil nadu

மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!

Share
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    22
    Shares

{ teenager sexually abused husband }
திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் ஆன இரண்டே வாரத்தில் கணவனின் நண்பர்களால் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செட்டிமூலையை சேர்ந்தவர் வீரசாமி. விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், லெட்சுமி(24) என்ற மகளும் உள்ளனர்.

வீராசாமியின் மகள் லெட்சுமிக்கும், திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேந்திரனுக்கும் (26) கடந்த மாதம் 25ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேந்திரன் புரோட்டா மாஸ்டராக பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் கடந்த ஜீன் 12ம் திகதி செட்டிமூலையில் உள்ள மணமகள் லெட்சுமி வீட்டில் விருந்து முடிந்து வீடு திரும்பிய போது மணமகன் ராஜேந்திரன் லட்சுமியிடமிருந்து தோட்டை வாங்கி அடமான வைத்து குடித்துள்ளார்.

பின்னர் இரவு 11மணியளவில் லெட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
.

லெட்சுமி சுமார் 2மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார் அவரை ராஜேந்திரன் விடிய விடிய அடித்து துன்புறுத்தியதோடு, லெட்சுமியின் முகத்தை உரலை கொண்டு தாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து தகவலயறிந்த லெட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், லெட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் தன்னை(லெட்சுமி), கணவர் நண்பர்கள் இருவரும் அழைத்து சென்று விட்டதாகவும் அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வீட்டிற்கு திரும்பிய தன்னை கணவர் கடுமையாக தாக்கியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து லெட்சுமியின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்க மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது புகாரை பதிவு செய்யாமல் மருத்துவமனையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வார்கள் என நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய, நண்பர்களுக்கு கணவனே உதவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags: teenager sexually abused husband

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்!

*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி

*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!

*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    22
    Shares
Tags:

You Might also Like