Type to search

எஸ்.சி:எஸ்.டி மக்கள் மீதான போலீஸ் அத்துமீறல் – பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் அதிகம்!

INDIA India Head Line

எஸ்.சி:எஸ்.டி மக்கள் மீதான போலீஸ் அத்துமீறல் – பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் அதிகம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதுடில்லியில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான காவல்துறை அத்துமீறல்களில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களே முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.காவல்துறையின் செயல்திறனை அறியும் விதமாக, தேசிய குற்றவியல் ஆணையம், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 15 ஆயிரம் பேர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்று, காவல்நிலையத்தில் போலீஸார் நடந்து கொள்ளும் விதம், போலீஸாரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர்.SC police overruns SD people-BJP ruling states

SC police overruns SD people-BJP ruling states

இந்த கணக்கெடுப்பில்தான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகமான தாழ்த்தப்பட்டவர்கள் – பழங்குடியினர் காவல்துறை அத்துமீறலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
பா.ஜ.க ஆளும் ராஜஸ்தானில், 78 சதவிகிதம் பழங்குடி மக்களும், குஜராத்தில் 54 சதவிகிதம் பழங்குடி மக்களும் காவல்துறை சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்டிரா, அசாம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களும், தங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, பீகார் ஆகிய பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் காவல்துறையால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ஆம் ஆத்மி ஆட்சியிலிருக்கும் தில்லி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடத்தும் தெலுங்கானா மாநிலங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை அதிகளவில் இருப்பதாக தாழ்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: