Type to search

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு!

India Top Story Tamil nadu

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ 18 MLAs disqualified }

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி கடந்த ஆண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர்.

ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.

அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில் மற்ற 18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் திகதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1:00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் இந்த வழக்கு மூத்த நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: 18 MLAs disqualified

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்! (படம் இணைப்பு)

*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்!

*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி

*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!

*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like