அரசுப் பள்ளிகளை மூடாதே! தனியார் பள்ளிகளை மூடு! – பள்ளி மாணவர்கள்!
Share

தமிழகத்தில் அரசுப் பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பள்ளிக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டு நேற்று (ஜூன் 12) ஆவேசப் போராட்டம் நடைபெற்றது.dont close government schools! Close private schools!
அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பள்ளிகளின் கல்வி இயக்குநரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநில செயலாளர் பி.உச்சிமாகாளி தலைமையில் போராட்டம் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் க.நிருபன்,செயற்குழு உறுப்பினர்கள் இசக்கி நாகராஜ், தீ.சந்துரு, தினேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
More Tamil News
- கைது செய்ய தேடப்படும் எஸ்.வி.சேகர்! – போலீஸ் பாதுகாப்புடன் உணவு விடுதியில்!
- “நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!
- இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்!!
- காலா – ராமனா? ராவணனா? – ரஜினி நிழலும்! ரஞ்சித் நிஜமும்!
- குழந்தைகளுக்காக “நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா” விழிப்புணர்வு பேரணி!