Type to search

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தந்தைக்கு தூக்கு தண்டனை ரத்து!

Tamil nadu

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தந்தைக்கு தூக்கு தண்டனை ரத்து!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

{ Daughter raped assassinated father }

ராமேஸ்வரம், கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (51). இவரது மனைவி தனுஷ்பானு.

கடந்த 2013-ஆம் ஆண்டு மாரி – தனுஷ்பானு இடையே தகராறு எழுந்துள்ளது. இதையடுத்து, தனுஷ்பானு தனது 9 வயது மகளையும், மகனையும் கரையூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.

இந்நிலையில், 23.4.2013-ல் “தனுஷ்பானுவின் மகள்” ராமேஸ்வரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுதொடர்பாக ராமேஸ்வரம் கோவில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.

இந்நிலையில், மகளை பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை கடலில் வீசியதாக மாரிமுத்துவை போலீஸார் 2016-ஆம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி மாரிமுத்துவுக்கு 3.11.2017-ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வாதிடுகையில், சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுக்குப் பிறகே மாரிமுத்துவை கைது செய்து போலீஸார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் சாட்சிகள் மாரிமுத்து கடற்கரையில் தனது மகளை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதை வைத்து அவர் தனது மகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார் அனந்த பத்மநாபன்.

இதையேற்று, மாரிமுத்துக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Daughter raped assassinated father

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி

*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!

*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com

 


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: