Type to search

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு?

Tamil nadu

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு?

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ 18 MLAs pronounced tomorrow }

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், டிடிவி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைவில் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தநிலையில் செப்டம்பர் 20-ம் திகதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 24 ஆம் தேதியன்று ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: 18 MLAs pronounced tomorrow

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்!

*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி

*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!

*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: