Type to search

குடிபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 159 பேர் கைது!

India Head Line Tamil nadu

குடிபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 159 பேர் கைது!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

சென்னையில் பைக் ரேஸ் நடத்தத் தடையிருந்தாலும், அதையும் மீறி வார விடுமுறை நாள்களில் பைக் ரேஸ் நடத்தப்பட்டுவருகிறது.159 people arrested drunken driving

சென்னையில் மெரினா தொடங்கி, பல சாலைகளிலும் இளைஞர்கள் பைக் ரேஸ்சில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காவல்துறையிடம் சிக்கினாலும் உயரதிகாரிகளின் சிபாரிசு காரணமாக உடனே வெளியில் வந்துவிடும் நிலைதான் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் பைக் ரேஸை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறிவருகின்றனர். பைஸ் ரேஸில் ஈடுபடுவர்கள் விபத்தில் அவர்களே சிக்குவதுமில்லாமல், சாலையில் செல்லும் அப்பாவி மக்களையும் சில நேரங்களில் கொன்றுவிடுகின்றனர்.

159 people arrested drunken driving

இதனிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னை முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடத்தில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. பைக்குகளில் வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீஸார் சென்னை முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகன ஓட்டிய 159 பேரும், போக்குவரத்து விதிகளை மீறிய 132 பேரும், பைக் ரேசில் ஈடுபட்ட 42 பேரும் பிடிபட்டனர்.

ஒருநாள் நடத்தப்பட்ட இரவு நேர வாகன சோதனையின்போது பலர் பிடிபட்ட நிலையில் தினமும் இரவில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவேண்டும் என்பதே சென்னை வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: