Type to search

ஐந்து கரடிகளுக்கு தன் கண்களை விருந்தளித்த இளைஞர்!

India Head Line Tamil nadu

ஐந்து கரடிகளுக்கு தன் கண்களை விருந்தளித்த இளைஞர்!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

கன்னியாகுமரி மாவட்டம், மாறாமலை கிராம்பு எஸ்டேட்டில், தொழிலாளி ஒருவரை 5 கரடிகள் தாக்கியதில், இரண்டு கண்களும் பறிபோன நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.young man eyes fed five bears kanyakumari

young man eyes fed five bears kanyakumari

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் (38). இவர், கன்னியாகுமரி மாவட்டம் அச்சன்காடு பகுதியில் வசித்துவருகிறார். அவர், மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இன்று காலை 6 மணியளவில், அச்சன்காவிலிருந்து மாறாமலை எஸ்டேட்டுக்கு வேலைக்கு பைக்கில் சென்றிருக்கிறார். மாறாமலை பகுதியில் சென்றபோது, 5-க்கும் மேற்பட்ட கரடிகள் ஒன்றுசேர்ந்து ஞானசேகரை வழிமறித்திருக்கிறது. பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஞானசேகரை கரடிகள் விரட்டித் தாக்கியுள்ளன. கரடிகளிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவர் அலறியிருக்கிறார். எஸ்டேட்டில் பணிபுரிந்துக் கொண்டிருந்தவர்கள் கம்புகளால் கரடிகளை விரட்டிவிட்டு, ஞானசேகரை மீட்டனர்.

young man eyes fed five bears kanyakumari

இந்நிலையில் கரடிகள் தாக்கியதில் அவரது இரண்டு கண்களும் போய்விட்டன. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: