Type to search

விஸ்வரூபத்தை எதிர்த்தால்? – அரசியல் விஸ்வரூபனாக எதிர்கொள்வேன் : கமலஹாசன்!

India Top Story Tamil nadu

விஸ்வரூபத்தை எதிர்த்தால்? – அரசியல் விஸ்வரூபனாக எதிர்கொள்வேன் : கமலஹாசன்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விஸ்வரூபம் 2 என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10ந்தேதி வெளியிடப்பட உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல்ஹாசன் டிரெய்லரை வெளியிட்டார்.oppose Vishwaroopam – face political aspirations kamal

இதுகுறித்து விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், இந்த படம் ஹாலிவுட் படத்தைப் போல் பல்லாயிரக்கணக்கான பிரிண்டுகளாக உலகெங்கிலும் வெளியிடப்படப்பட உள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் நீட்சியாக மட்டுமல்லாமல் அதன் முன்கதையும் இதில் உள்ளதாகக் கூறினார். திரைப்படத்தையும் அரசியலையும் சேர்த்துக் குழப்பக் கூடாது, என்று கூறிய கமல்ஹாசன் இரண்டும் வெவ்வேறானவை என்றும் அவர் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது போல், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பு கிளம்பாது என்று தெரிவித்த கமல், விஸ்வரூபம் 2 படத்தை முன்கூட்டியே போட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என்றும் கூறினார்.

மேலும் ஒரு வேளை எதிர்ப்புகள் வந்தால் அதனை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: