Type to search

செவிலியர்களின் ஊதியம் உயர்கின்றது: உத்தரவாதம் அளித்தது தமிழக அரசு!

Tamil nadu

செவிலியர்களின் ஊதியம் உயர்கின்றது: உத்தரவாதம் அளித்தது தமிழக அரசு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Nurse salary rises Guaranteed }

ஒப்பந்த செவிலியருக்கான ஊதியத்தை 7,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி ஜெயபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செவிலியர்களின் ஊதியத்தை 7,00 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து 15 நாட்களுக்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கையை பரிசீலித்து 6 மாதங்களுக்குள் அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, செவிலியர் பிரச்சனை தொடர்பாக தீர்வு காண சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Nurse salary rises Guaranteed

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்!!

*மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like