Type to search

மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

INDIA India Head Line

மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

{ Muttan husband murdered wife }

மட்டன் சமைத்துத்தர மறுத்த மனைவியை, குடிபோதையில் இருந்த கணவர் தலையில், அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸ்பாத் மாவட்டத்தில் உள்ள பச்வான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 30), இவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது, அவர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டதாகக் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலில் அடிப்படையில், அவரது கணவரே அவரை கொலை செய்து 3வது மாடியில் இருந்து உடலை தூக்கி கீழே போட்டது தெரியவந்தது.

கடந்த வியாழன் அன்று இரவு 11.30 மணியளவில் ராணியின் கணவரான மனோஜ், வழக்கம்போலவே குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். தனது மனைவியிடம் மட்டன் சமைத்துத் தரும் படி மனோஜ் வற்புறுத்தியுள்ளார்.

அவரது மனைவி மறுக்கவே, அருகில் இருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு அவரின் தலையில் அடித்ததில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.

பின்னர், கொலை வழக்கில் இருந்து தப்புவதற்காக, தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் உதவியுடன் ராணியின் உடலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் இருந்து கீழே போட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. கொலை செய்த கணவர் மனோஜ் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவருக்கு உதவிய அவரின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

தப்பியோடிய மனோஜை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Muttan husband murdered wife

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

*பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

*ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags:

You Might also Like