கஞ்சா போதையில் ரவுடிகள்! – கண்ணில் தென்பட்ட அனைவருக்கும் அரிவாள் வெட்டு!
Share

சென்னை செம்மஞ்சேரியில் கஞ்சா போதையில் சாலையில் செல்வோரையெல்லாம் ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிலருக்கும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சிலருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.ganjha rowdy cut sickle public everyone
இந்நிலையில் நேற்றிரவு பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ரவுடிகள் கஞ்சா போதையில் சுனாமி நகர் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளனர். அவ்வழியே சென்ற 3 பேரை அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஹோட்டல், மளிகை கடை, வீடுகள் மீது கல்வீச்சி தாக்கல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த சில பொருட்கள் சேதமடைந்தன. மேலும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெயசீலன் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவருக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
More Tamil News
- பாலியல் வன்முறை புகாரில் – ஸ்மார்ட்போன் உரிமையாளர் கைது!
- சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!
- கமலஹாசன்! தொகுப்பாளரா? அரசியல்வாதியா? : பிக்பாஸ்-2!
- சிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கிய 45 வயது பெண்!
- நடுரோட்டில் அரங்கேறிய இளம் தம்பதியினரின் லவ் மேக்கிங்!
- அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?