Type to search

காலாவதியான பியர்களை பார்களில் வைத்து விற்பனை… குடிமகன்களுக்கு அதிர்ச்சி!!

INDIA

காலாவதியான பியர்களை பார்களில் வைத்து விற்பனை… குடிமகன்களுக்கு அதிர்ச்சி!!

Share

(Exhausted berries sold  bars)

டெல்லியின் பிரபலமான பார்கள், பப்களில் கடந்த 8 மாதங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகள் மூலம் காலாவதியான பீர்கள் வாடிக்கையாளர்களுக்கு  பரிமாறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் இந்தாண்டு ஏப்ரல் 13ந் தேதி வரை டெல்லியின் முக்கியமான பகுதிகளில் செயல்பட்டு வரும் பார்கள், பப்கள் மற்றும் உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு  காலாவதியான பீர் பரிமாறப்பட்டுள்ளதாக ஆய்வு நடத்திய அதிரடி சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, அதோடு  ,டெல்லி சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் எந்தெந்த பார்கள், பப்களில் காலாவதியான பீர்கள் பரிமாறப்பட்டது என்பது குறித்து தகவல் அளிக்காத நிலையில், வசந்த் விஹார், ரஜோரி கார்டன், சாகெட், நியூ ஃபிரண்ட்ஸ் காலணி, பஞ்சாபி பாக், லஷ்மி நகர், Connaught Place மற்றும் ஜனாக்பூரி பகுதிகளில் செயல்பட்டு வரும் பார்களில் வாடிக்கையாளர்களுக்கு காலாவதியான பீர்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் சட்டப்படி உரிய வயது அடையாதோருக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 5 வழக்குகளும் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் , பிரபலமான பார்கள், பப்களில் காலாவதியான பீர்கள் பறிமாறப்பட்ட தகவலை அறிந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  டெல்லியில் 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

tags;-Exhausted berries sold  bars

MORE TAMIL NEWS

கமலஹாசன்! தொகுப்பாளரா? அரசியல்வாதியா? : பிக்பாஸ்-2!
பெ.மணியரசன் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!
கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com
*Tamilgossip.com
*Tamiltechno.com
*tamilfood.com