Type to search

சென்னை மருத்துவர் விஷமருந்தி தற்கொலை… நடந்தது என்ன??

Uncategorized

சென்னை மருத்துவர் விஷமருந்தி தற்கொலை… நடந்தது என்ன??

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

(Chennai doctor poison drank suicide)

சென்னையில் சிவநாதன் என்ற பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவரும் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சிவநாதன்(25) சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து, பின் அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 2 நாள் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற சிவநாதன் விஷமருந்தினார். வெகு நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால்,  சிவநாதனின்  பெற்றோர், அவரது அறைக்கு சென்று பார்த்த போது சிவநாதன் மயங்கிக் கிடந்தார்.

மேலும் , அதிர்ச்சியடைந்த அவர்கள், சிவநாதனை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் , சிவநாதன் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags;-Chennai doctor poison drank suicide

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

*பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

*ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: