Type to search

பேன்டுக்குள் பாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்!

INDIA

பேன்டுக்குள் பாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்!

Share
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    31
    Shares

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுந்த் நகரைச்சேர்ந்த வீரேஷ் காதேமணி தனது இரு சக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்றுள்ளார். தனது வாகனத்தை மெதுவாக ஓட்டிச் சென்ற வீரேஷ் தனது காலில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்துள்ளார். இருப்பினும் சரியாக கவனிக்காத அவர் தண்ணீர் பட்டு பேன்ட் நனைந்திருக்கும் என எண்ணி பைக்கை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.young man drove bike even knowing snake pants

இதனைத்தொடர்ந்து சந்தைக்கு சென்ற அவர் தனது நண்பர்களை சந்தித்து பேசிவிட்டு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகையில் பேன்டின் கால்பகுதியில் பாம்பின் வால் பகுதியைக் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பைக்கில் இருந்து குதித்து பக்கத்திலிருந்த கடைக்குள் ஓடிதனது பேன்டை கழற்றி வீசினார். அப்போது பேன்டினுள் இருந்த 2 அடி நீளம் கொண்ட பழுப்பு நிற பாம்பு வெளியே வந்து விழுந்தது. அதை அருகிலிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது , பக்கத்திலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து தப்பித்து விட்டது.

இதுகுறித்து சொந்தமாக ஓட்டல் நடத்தி வரும் வீரேஷ் காதேமணி தான் வழக்கம் போல் நிறுத்தும் இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். மரத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த பைக்கில் இஞ்சினில் ஏறிய பாம்பு பைக்கை ஓட்ட ஆரம்பித்ததும் சூடேறியதால் தனது பேன்டுக்குள் சென்றிருக்கும் என அவர் தெரிவித்தார். மேலும் கூறிய அவர் தான் பேன்டை கழற்றி வீசியதால் உயிர் தப்பினேன் என்றும் அது என்ன பாம்பு என தெரியவில்லை என்றும் அதிர்ச்சியுடன் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    31
    Shares
Tags: