Type to search

ரோந்து போலீசாருக்கு அடி உதை… ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது..!

Tamil nadu

ரோந்து போலீசாருக்கு அடி உதை… ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது..!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(police fight five rowdis)

சென்னை ஓட்டேரியில் ஆர்.கே.புரம் – திடீர் நகர் பகுதியினரிடையே நடைபெற்ற சண்டையை தடுக்கச் சென்ற ரோந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு ரவுடி உள்பட 5 பேரை தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி திடீர்நகர் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் நடப்பதாகவும், புஷ்பா என்ற மூதாட்டி தாக்கப்பட்டதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் , இரண்டு போலீசார் முதலில் ஜிப்ஸி ரோந்து வாகனம் மூலம் சென்ற போது அங்கு கஞ்சா போதையில் இருந்த 15 பேர் கொண்ட கும்பல் போலீசாரை திடீர் நகருக்குள் வரவிடாமல் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு வந்த 6 போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி போலீசாரின் வாகனங்களை அடித்து உடைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.  இதில், 5 ஊர்காவல்படை போலீசார் உள்பட 8 போலீசார் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றும் ,  ஆர்கேபுரம் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தினருக்கும், திடீர்நகர் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பான வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து இருபகுதியினரிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டி தாக்கப்பட்டதாகவும்,  அப்போது காயமடைந்த  சிலர் கீழ்பாக்கம்  அரசு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

tags;-police fight five rowdis

More Tamil News

Tamil News Group websites :

 

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares