Type to search

உணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு – சி.சி.டி.வியில் சிக்கிய திருடர்கள்!

India Head Line Tamil nadu

உணவகம் முன்பு இருசக்கர வாகனம் திருட்டு – சி.சி.டி.வியில் சிக்கிய திருடர்கள்!

Share

சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகளின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், வெள்ளியன்று இரவு தனது நண்பருடன் பட்டினப்பாக்கத்தில் ஒரு உணவகத்தில் உணவு அருந்தினார்.Two wheeler robberies restaurant – CCTV trapped thieves

Two wheeler robberies restaurant - CCTV trapped thieves

பின்னர் வெளியே வந்த அவர், தான் விட்டுச் சென்ற இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பட்டினப்பாக்கம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் இருசக்கர வாகனங்களை சுற்றிச்சுற்றி வந்ததும், ஒருவன் ராஜேஷ்குமாரின் பைக்கை திருடிச் சென்றதும் பதிவாகியிருந்தது.சி.சி.டி.வி. காட்சிகளின்படி, வாகன திருடர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: