Type to search

மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்!

Tamil nadu

மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ Uniform students Uniform Minister }

நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் 1985-86 முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2012-13 முதல் ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன.

இலவச சீருடை திட்டத்துக்கு தேவையான துணிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2018-19 கல்வியாண்டில் விலையில்லா சீருடை திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடைகளை வழங்குவதற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்வா க்ரீன் மற்றும் மெடோ க்ரீன் வண்ணத்திலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு லைட் பிரவுன் மற்றும் மெரூன் வண்ணத்திலும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: Uniform students Uniform Minister

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்!

*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு!

*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??

*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்!

*பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி!

*நடிகை நக்மாவுக்கு வந்த சோதனை! – காரணம்? 6 வில்லங்கங்கள்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like