Type to search

பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம்!

INDIA India Top Story

பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ PM plans kill Modi }

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் போலவே, பிரதமர் மோடியையும் கொலை செய்வதற்கு மாவோயிஸ்டுகள்(இயக்கம்) சதித்திட்டம் தீட்டியிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக மகாராஷ்ட்ர மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

புனேவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஜாதிக் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவரது வீட்டில் இது தொடர்பான தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதம் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மும்பையைச் சேர்ந்த சுதிர் தவாலே(Sudhir Dhawale), டெல்லியைச் சேர்ந்த ரோனா ஜேக்கப் வில்சன் (Rona Jacob Wilson), நாக்பூரைச் சேர்ந்த சுரேந்திரா கேட்லிங் (Surendra Gadling), சோமா சென் (Shoma Sen), மகேஷ் ரவுட்(Mahesh Raut) ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, டெல்லியைச் சேர்ந்த ரோனா ஜேக்கப் வில்சன் என்ற நபரது வீட்டில், பிரதமர் மோடியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பான கடிதம் கைப்பற்றப்பட்டதாக, அரசு தரப்பு வழக்கறிஞரான உஜ்வாலா பவார் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், பிரதமர் மோடியைக் கொல்வதற்கு எம்-4 ரக துப்பாக்கி வாங்க வேண்டும் என்றும், அதற்காக 8 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் போலவே மோடியை படுகொலை செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டால், சதியின் முழு விவரம் தெரிய வரும் எனவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 14 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: PM plans kill Modi

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??

*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்!

*பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி!

*நடிகை நக்மாவுக்கு வந்த சோதனை! – காரணம்? 6 வில்லங்கங்கள்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like