Type to search

பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி!

Tamil nadu

பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

விருதுநகர் மாவட்டம், ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்திலக் – கனகலட்சுமி தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர்களது குழந்தை கடத்தப்பட்டதாக பெற்றோர் கடந்த 5-ம் தேதி விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தனிப்படை அமைத்த போலீஸார், சிசிடிவி பதிவைக் கொண்டு சிறுமியின் தந்தை ராஜ்திலக்கிடம் சந்தேகத்தின் அடிப்படையில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, நண்பர்களுடன் இணைந்து தனது குழந்தையை கடத்தியதை ராஜ்திலக் ஒப்புக்கொண்டார்.Parents kidnapped child money

Parents kidnapped child money

இதனைத்தொடர்ந்து அவருடன் பணியாற்றிய வெங்கடேஷ், பிரபு, அசோக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 4-ம் தேதி மில் உரிமையாளர் சண்முகனின் மகளை கடத்தி 4 கோடி ரூபாய் வரை பணம் பறிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அதற்காக ஒத்திகை பார்க்கும் விதமாக ராஜ்திலக்கின் குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 4 பேரையும் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: