Type to search

சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்!

India Head Line Tamil nadu

சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

{ Corpses begin rot Chennai hospital mire }

சென்னையில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உள்ள, அடையாளம் காணப்படாத சடலங்கள் அழுகத் தொடங்கியுள்ளதால், அவற்றை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை மற்றும் குரோம்பேட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளில் பிணவறைகள் உள்ளன. அங்குள்ள குளிரூட்டப்பட்ட அறையில் 100- க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத அளவில் சடலங்கள், ஒரு மாதத்துக்கும் மேல் வைக்கப்பட்டுள்ளன.

இவை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளில் சிக்கியோர், ஆதரவற்றோர்,வெளியூரைச் சேர்ந்தவர்களின் சடலங்களாகும். பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்தந்த காவல் நிலைய போலீசாரால் மீட்கப்பட்டு, அருகே உள்ள பிணவறைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

வழக்கமாக இந்த சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, பிணவறைகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும். ஆனால், கடந்த ஒரு மாதமாக, சென்னையில் உள்ள 6 பிணவறைகளிலும் நூற்றுக்கும் அதிகமான உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அடையாளம் காண வேண்டிய பணிகள், போலீசாரின் பல்வேறு பணிச்சுமைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டு வருகின்றது. காயங்களுடன் மீட்கப்பட்ட இந்த உடல்கள், தற்போது அழுகத் தொடங்கியுள்ளன.

இதனால், பிணவறை பகுதியைத் தாண்டி, மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கும் அழுகிய துர்நாற்றம் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புறக்காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார்களும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அழுக தொடங்கிய பிரேதத்தை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசு மருத்துவமனைகள் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசார் அந்தந்த காவல் நிலையங்களுக்கு, தகவல் அளித்துள்ளனர்.

Tags: Corpses begin rot Chennai hospital mire

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு!

*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??

*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்!

*பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி!

*நடிகை நக்மாவுக்கு வந்த சோதனை! – காரணம்? 6 வில்லங்கங்கள்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com

 


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: