Type to search

ஜெயலலிதாவின் மரண வழக்கு குறித்து ஏழையொருவருக்கு ரூ.50,000 அபராதம்!

Tamil nadu

ஜெயலலிதாவின் மரண வழக்கு குறித்து ஏழையொருவருக்கு ரூ.50,000 அபராதம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ CBI probe Jayalalithaa death case }

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தவிடக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த எம்.ராமநாதன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்கனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணைநடைபெற்று வரும் நிலையில் தேவையில்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் மனுதாரருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதை சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

Tags: CBI probe Jayalalithaa death case

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*வரும் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு பயணம்!

*காலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு!

*ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்!

*நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்!

*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: