Type to search

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்!

India Top Story Tamil nadu

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்!

Share
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares

{ Sterlite plant reopened months Tuticorin }

தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும் தான் காரணம் என்று டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக பொதுமக்கள் பல்வேறு கிராமங்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100வது நாள் வன்முறையாக வெடித்தது.

இந்நிலையில் போலீசார் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது தமிழக அரசு.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Sterlite plant reopened months Tuticorin

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்!

*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்

*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares
Tags:

You Might also Like