Type to search

கொட்டும் கனமழையினால் முதல் நாளிலேயே மூழ்கப்போகும் மும்பை!

INDIA

கொட்டும் கனமழையினால் முதல் நாளிலேயே மூழ்கப்போகும் மும்பை!

Share
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares

{ Mumbai drowning first day heavy rain }

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகின்றது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. மும்பையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வெளியே செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மாணவ, மாணவியர், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழையால் அங்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் மழை மிக கடுமையாக பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர கடலோர மாவட்டங்களிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மும்பைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு குழுவினரும் துணை ராணுவப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி, சிந்து துர்க் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for heavy rain in mumbai

Image result for heavy rain in mumbai

Tags: Mumbai drowning first day heavy rain

<< மேலதிக இந்தியா செய்திகள் >>

*ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

*வரும் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு பயணம்!

*காலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு!

*ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்!

*நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்!

*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares
Tags:

You Might also Like